தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் - 19: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்க கோரிக்கை

டெல்லி: ஊரடங்கால் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் சிறப்புச் சலுகைகள் அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Differently Abled
Differently Abled

By

Published : Mar 28, 2020, 9:08 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனால், பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மாற்றித்திறனாளிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இம்மாதிரியான சூழலில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் சகுந்தலா காம்லின் உள்துறைச் செயலாளர் பல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்த கடிதத்தில், "ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும். மாநிலத்தில் இயங்கும் சம்பந்தப்பட்ட துறைகள் இதனை காண்காணிக்க வேண்டும். சிறப்புச் சலுகைகள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காலதாமதமின்றி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் பராமரிப்பாளர்களுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். இதுபோன்ற சூழல்களில் அரசு பொறுப்பேற்று அத்தியாவசிய தேவைகளை வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கேரள மலைவாழ் மக்கள்; நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details