மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பாஜக சார்பாக நடந்த தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று பங்கேற்றார். அதில் வன்முறை வெடித்து பாஜகவினரும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டனர். இந்த பயங்கர கலவரத்தில் மேற்கு வங்க மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தபட்டது.
கலவரம் எதிரொலி: மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை நேரம் குறைப்பு!
கொல்கத்தா: வன்முறை காரணமாக மேற்கு வங்கத்தில் 17ஆம் தேதி நிறைவடைய வேண்டிய தேர்தல் பரப்புரை, 20 மணி நேரத்திற்கு முன்பாக நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம், வன்முறை காரணமாக மே.19ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குபதிவுக்கான தேர்தல் பரப்புரை 20 மணி நேரத்திற்கு முன்பாக மே.18ஆம் தேதி இரவு 10 மணிக்கே நிறைவடையும் என்று அறிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரதுறை செயலாளர் ஆகியோர் தேர்தல் பணிகளில் குறுக்கீடு செய்ததால் அவர்கள் பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 9 தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.