தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: விமான படைத் தளபதி நம்பிக்கை

ஹைதராபாத்: இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்க்கப்படும் என இந்திய விமான படைத் தளபதி ஆர்.கே. பதௌரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Air Marshal
Air Marshal

By

Published : Jun 20, 2020, 1:46 PM IST

Updated : Jun 20, 2020, 2:38 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை அகாதமியின் ஆண்டு அணிவகுப்பு நிகழ்வில் விமான படைத் தளபதி ஆர்.கே. பதௌரியா கலந்துகொண்டார். வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், சீனா விவகாரம் தொடர்பாக அவர் பேசினார்.

அப்போது, “குறுகிய காலத்திற்குள் விரைந்து செயல்படும் திறனை ராணுவம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு லடாக் எல்லையில் நடைபெற்ற நிகழ்வு ஒரு எளிய உதாரணம். வீரமரணடைந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரு நாடுகளும் எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலமே விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்நிகழ்வின்போது எல்லையில் நடைபெற்ற மோதலில் வீரமரணமடைந்த 20 வீரர்களுக்கு விமான படைத் தளபதி பதௌரியா உள்ளிட்ட ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:பிளாஸ்மா சிகிச்சை: டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

Last Updated : Jun 20, 2020, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details