கர்நாடகா மாநிலத்தில் அண்மையில் பசு வதை தடுப்பு சட்டம் அமலுக்கு வந்தது. சட்டத்தை மீறும் நபர்களுக்கு ஏழ ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர். பீப் கறி ருசி கண்ட மக்களை காட்டிலும், இந்த தடை சட்டம் வனவிலங்குகளை தான் சோகத்தில் ஆழ்த்தியது. மைசூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி, முதலை, ஆப்பிரிக்கை சிறுத்தை என பல வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளுக்கு தினம்தோறும் 350 கிலோ மாட்டிறைச்சி வழங்கப்பட்டு வந்தது.
'பீப் வேணும்' - ருசி தேடும் மைசூர் வன விலங்குகள்!
பெங்களூரு: பசு வதை தடுப்பு சட்டத்தால் மைசூர் வனவிலங்கு, பூங்கா விலங்குகள், பீப் கறிக்கு பதிலாக சிக்கன் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு
ஆனால், தற்போதைய புதிய சட்டத்தால், இந்த விலங்குகளுக்கு 500 கிலோ சிக்கன் கறி வழங்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான இறைச்சி வழங்கப்பட்டாலும், விலங்குகள் பிடித்தமான உணவு சிக்கன் கிடையாது.
இதுகுறித்து பேசிய வினவிலங்கு பூங்கா காப்பாளர் அஜித் குல்கரினி, "சிக்கன் உணவை சாப்பிடும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தால் மாட்டிறைச்சி வனவிலங்குகளுக்கு கொடுக்கப்பட முடியவில்லை" எனத் தெரிவித்தார்.