இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சார்பில் பல கோடி ரூபாய் கையூட்டு வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை இத்தாலியில் நடைபெறும் நிலையில், இந்தியாவில் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது.
இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மருமகன் ரதுல் பூரியும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், இந்த விசாரணையை அக்.21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.