தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கேஜ்ரிவால் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Arvind Kejriwal  EC  Notice to Delhi CM  அரவிந்த் கெஜ்ரிவால்  தேர்தல் நடத்தை விதிகள்
Arvind Kejriwal

By

Published : Feb 7, 2020, 8:52 PM IST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் கூறி, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸ்

மேலும், இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸ்

இதையும் படிங்க: தலைநகரம் யாருக்கு? டெல்லி தேர்தல் குறித்து அலசும் ஈடிவி பாரத்

ABOUT THE AUTHOR

...view details