தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 9:16 AM IST

ETV Bharat / bharat

'சிஏஏ குடியுரிமையைக் கொடுக்கும் சட்டம், பறிக்கும் சட்டமல்ல' - அமித் ஷா விளக்கம்

ஜெய்ப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை வழங்குவதற்கான சட்டம் தானே தவிர பிறரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டமில்லை என மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

amit shah
amit shah

ராஜஸ்தான் மாநிலம், ஜபல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை விவகாரம் குறித்துப் பேசினார்.

பாகிஸ்தானில் மத ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அனைவருக்கும் குடியுரிமை வழங்காமல் இந்த அரசு ஓயாது என அமித் ஷா தீர்க்கமாகத் தெரிவித்தார். பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் இந்தியாவின் பிள்ளைகள் எனத் தெரிவித்த அமித் ஷா, அவர்களுக்கு இந்தியா மீது சமமான உரிமை உண்டு என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்திய சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிக்கும் விதமான அம்சம் எதுவும் இல்லை என உறுதியளித்த அவர், எதிர்க் கட்சிகளின் தலைவர்களான ராகுல், மம்தா ஆகியோர் அதை நிரூபிப்பார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் குடியுரிமையை வழங்கும் சட்டமே தவிர, குடியுரிமையைப் பறிக்கும் சட்டமில்லை எனக் கூறினார்.

இதையும் படிங்க: கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!

ABOUT THE AUTHOR

...view details