தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமித் ஷாவின் கழுகுப் பார்வையில் ஹரியானா!

டெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 10 தொகுதிகளை வென்ற ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா அமித் ஷா வீட்டிற்கு சென்றுள்ளார்.

Amit Shah, Dushyant

By

Published : Oct 25, 2019, 9:27 PM IST

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. பாஜக 70 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், அக்கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் சுயேச்சைகள் எட்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தனர். மேலும் ஒரு தொகுதியை ஜனநாயக் ஜனதாவின் தாய்க்கழகமான இந்திய தேசிய லோக் தளம் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஹரியானா அரசியலில் ஜனநாயக் ஜனதா கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுயேச்சைகளின் உதவியோடு பாஜக ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளியாகின. இதனிடையே, மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூரின் வீட்டிற்கு ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா சென்றிருந்தார். பின்னர், இருவரும் உள் துறை அமைச்சர் அமித் ஷா வீட்டிற்குச் சென்றனர்.

முன்னதாக துஷ்யந்த் சவுதாலா, "நல்ல முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படும். எங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைந்தால், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா சட்டப்பேரவையை அலங்கரிக்கப் போகும் 24 பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details