உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நடந்த சர்ச்சைக்கு எட்டு வாரங்களுக்கு பிறகு, ஜூன் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடனான வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இது நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, இருதரப்பிலும் படைகள் விலக்கிக்கொள்வது தொடங்கியுள்ளது. இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகளும் எல்லை குறித்த பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு படை விலக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர், ஜூலை 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தொலைபேசி உரையாடலை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வான் மோதல்களைத் தொடர்ந்து கடந்த மாத தொடக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வாங் யியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். பின்னர் இரு தலைவர்களும் கோவிட்-19 ஒத்துழைப்பு குறித்த ரஷ்யா-இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை ரஷ்ய பிரதிநிதியுடன் கலந்து கொண்டனர்.
இருப்பினும் இருதரப்பிற்கு இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோடு தகராறு இந்நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லை.
தோவல் மற்றும் வாங் யி ஆகியோர் எல்லை தகராறுக்கான தீர்வைக் காண நியமிக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பெய்ஜிங்கில் தற்போதுள்ள அரசு பதவிப்படி, மாநில கவுன்சிலர் பதவி வெளியுறவு அமைச்சரை விட உயர்ந்தது. 2017 ஆம் ஆண்டு வரை சீன மாகாண கவுன்சிலராகவும் சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்த யாங் ஜிச்சி-யுடன் தோவல் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அப்போது வாங் ஜிச்சி வெளியுறவு அமைச்சராக இருந்தார். இரண்டு சிறப்பு பிரதிநிதிகளுக்கிடையில் உரையாடலை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா இப்போது உயர் மட்ட இராஜதந்திர ஈடுபாட்டை அடையாளம் காட்டியுள்ளது. அலுவலர்களின் கூற்றுப்படி, வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்று ஒப்புக் கொண்டதோடு, இந்தோ-சீனா எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே தற்போதுள்ள ஒருமித்த கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
"சமாதானத்தையும் அமைதியையும் முழுமையாக மீட்டெடுப்பதற்காக உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருந்தும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளிலிருந்தும் துருப்புக்களை விலக்கிக்கொள்வதை விரைவாக உறுதிசெய்வது அவசியம் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இது சம்பந்தமாக உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் படைவிலக்க செயல்முறைகளை இரு தரப்பினரும் விரைவாக நடத்த வேண்டும், " என்று இந்திய அரசாங்க அறிக்கை கூறியது.