கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூபாய் 100 அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், புதுச்சேரி நகர்ப்பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களைக் காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
முகக்கவசமின்றி வெளியே வர வேண்டாம் - காவல் துறை எச்சரிக்கை!
புதுச்சேரி: முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களை கடுமையாக எச்சரித்த காவல் துறையினர், அபராதம் விதிக்காமல் அனுப்பிவைத்தனர்.
dont come without mask puducherry police
அடுத்தக்கட்டமாக முகக்கவசம் இல்லாமல் சாலையில் திரிந்தால் அவர்களிடம் 100 ரூபாய் அபராதம் தொகை கட்டாயம் வசூலிக்கப்படும் என்று புதுச்சேரி காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் பார்க்க: ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாத வாடகையில் விலக்கு!