தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் பாராட்டிய நாய் உயிரிழப்பு... இறுதிச்சடங்கு நடத்திய காவல் துறை!

By

Published : Dec 2, 2020, 7:02 PM IST

லக்னோ: பிரதமர் மோடி, மான் கி பாத் உரையில் பாராட்டிய ராகேஷ் என்கிற நாய், கல்லீரல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக உயிரிழந்தது.

பிரதமர்
பிரதமர்

பிரதமர் மோடி, மான் கி பாத் உரையில், உத்தரப் பிரதேசத்தில் உரிமையாளர் சாலையில் விட்டுசென்ற நாயை, காவல் துறையினர் தத்தெடுத்து வளர்ப்பதை குறிப்பிட்டு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

அந்த நாய்க்கு, காவல் துறையினர் ராகேஷ் என பெயர் சூட்டியிருந்தனர். அன்றிலிருந்து, ராகேஷ் நாய் சூப்பர் ஹீரோவாக அப்பகுதியில் வலம்வந்தது.

இந்நிலையில் இன்று, ராகேஷ் நாய் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணணாக உயிரிழந்துள்ளது. அதற்கு, காவல் துறையினர் முழு மரியாதை செலுத்தி இறுதிச்சடங்கை நடத்தினர்.

இதுகுறித்து பேசிய தலைமை கான்ஸ்டபிள் அஜீஸ்-உர்-ரஹ்மான் கான், " இந்த நாயின் உரிமையாளர் ராகேஷ், தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், அவர் சொந்த ஊருக்கு விரைந்துள்ளார். உரிமையாளர் இல்லாததால் சாலையில் தவித்த நாயை, நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தோம். உரிமையாளரின் பெயரையே நாய்க்கு சூட்டினோம்" எனத் தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ராகேஷ் நாய்க்கு ரசிகர்களாக மாறியிருந்த சமயத்தில், அதன் உயிரிழப்பு பெரும் சோகத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details