தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிராந்திய மொழிகள் குறித்த கேள்விக்கு அனுமதி மறுப்பு: மக்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு

டெல்லி: மொழிகள் தொடர்பாக துணைக் கேள்வி எழுப்ப மக்களவையில் அனுமதி தரப்படாததால் வெளிநடப்பு செய்ததாக திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

DMK
DMK

By

Published : Mar 17, 2020, 5:05 PM IST

திமுக மக்களவைக்குழுத் தலைவரும் அக்கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு டெல்லியில் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில், ”இந்திய ஆட்சி மொழிகள் குறித்து மக்களவையில் இன்று விவாதம் எழுந்தது. இதில் இந்தியை வலுப்படுத்தவும், அதன் வளர்ச்சிக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக ஒரு துணைக் கேள்வியை எழுப்ப முயன்றேன். நாட்டில் அந்தந்த மாநில மொழிகளுக்கான முக்கியத்துவத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி அளித்த வாக்குறுதி என்ன ஆனது.

திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு

பிராந்திய மொழிகளுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கேட்க நினைத்தோம். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொருளாளர் பதவியைத் துறந்த துரைமுருகன்: 'அடுத்தது பொ.செ.தான்' - அடித்துக்கூறும் உ.பி.க்கள்!

ABOUT THE AUTHOR

...view details