தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைகளுக்காக அலுவலக ஏசியைத் தந்த மாவட்ட ஆட்சியர்

இந்தூர்: வெப்பத்தின் தாக்கத்தினால் தவித்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் மறுவாழ்வு மையத்தில், மாவட்ட ஆட்சியர் தனது அலுவலக ஏசியைக் கழட்டி பொருத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி

By

Published : Jun 7, 2019, 5:02 PM IST

Updated : Jun 7, 2019, 5:07 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம், உமரியா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி. இவர் இந்தூர் பகுதியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் மறுவாழ்வு மையத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள குழந்தைகள் அனைவரும் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டுள்ளனர். இதையறிந்த அவர், தனது அலுவலக அறை, அலுவலக வளாகத்தில் இருந்த சில ஏசிகளைக் கழட்டி மருத்துவமனையில் பொருத்த உத்தரவிட்டார்.

ஊட்டச்சத்து மருத்துவமனை

இதனால் அவர் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இதுகுறித்து அவர், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் மறுவாழ்வு மையத்தில் இருந்த குழந்தைகள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள ஏசி

அதனால்தான் சற்றும் யோசிக்காமல் இதை நான் செய்தேன். தற்போது மருத்துவமனையில் ஏசி வந்துள்ளதால், தற்காலிகமாக தீர்வு கிடைத்துள்ளது. ஆனாலும் இது போதாது என்பதால், நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஸ்வரோசிஷ் சோமவன்ஷி
Last Updated : Jun 7, 2019, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details