விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளிடம் விமான நிறுவனங்கள் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். விமான பயணத்தை ரத்து செய்தாலோ, நேரம் தாமதம் ஆனாலே அதுகுறித்த தகவல்களை பயணிகளுக்கு பொறுப்புடன் தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அவுரங்காபாத்துக்கு இன்று (டிச30) விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் ஐந்து மணி நேரம் தாமதமாக சென்றது. ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் இருந்த பயணிகள் கிட்டத்தட்ட தாங்கள் சிறைகளில் இருப்பது போல் உணர்ந்தனர். விமானம் தரையிறங்கும் நேரம் அங்கிருந்த ஒருவருக்கும் சரியாக தெரியவில்லை.டெல்லி மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் இதேபோல் விமானங்கள் தாமதமாக செல்கின்றன.