தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆட்சி நிர்வாகத்தில் கிரண்பேடி தேவையில்லாமல் தலையீடு செய்கிறார்' புதுச்சேரி முதல்வர் ஆவேசம்

புதுச்சேரி : அரசு எந்த உத்தரவிட்டாலும் அதைத் தடுத்து ஆட்சி நிர்வாகத்தை முடக்குகின்ற வேலையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்துவருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தில் கிரண்பேடி தேவையில்லாமல் தலையீடு செய்கிறார்!
ஆட்சி நிர்வாகத்தில் கிரண்பேடி தேவையில்லாமல் தலையீடு செய்கிறார்!

By

Published : Jul 10, 2020, 7:32 PM IST

இதுதொடர்பாக காணொலி சந்திப்பின் ஊடான செய்தியாளர்களிடம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, "உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 புதுச்சேரியில் சமூகப் பரவலாக மாறவில்லை.

வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரோடு தொடர்பில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தான் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

பாதிப்படைந்தவர்களை தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறுகிறோம். தற்போது ஆயிரத்தை தாண்டுகின்ற அளவுக்கு மருத்துவக் கண்டறிதல் பரிசோதனையை செய்து வருகிறோம்.

இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து உடனடியாக அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சைகளை அளித்தும் வருகிறோம். நாம் இந்த கடைகளை மூடுவதன் மூலமாக மட்டும் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்குமா? இல்லையா? என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளாக இருக்கின்ற காரணத்தைக் கருத்தில் கொண்டு அன்று மட்டுல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. அரசு எந்த கோப்பை அனுப்பினாலும் துணைநிலை ஆளுநர் அதை தடுத்து நிறுத்தி மாறாக உத்தரவை போட்டு நிர்வாகத்தை முடக்குகின்ற வேலையை பார்க்கிறார்.

கரோனா நேரத்தில் கூட அவரது தலையீடுகள் அதிகமாக உள்ளன. அலுவலர்களுக்கு நாங்கள் உத்தரவிட்டால், அந்த உத்தரவை மீறி துணைநிலை ஆளுநர் மறு உத்தரவை போட்டு குழப்பத்தை விளைவிக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி, வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி, மீனவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவற்றை தடுத்து நிறுத்துகிறார். இப்படி பல திட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவதால் எங்களுடைய அரசால் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.

அதனை எதிர்த்து போராட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம். புதுச்சேரிக்கு மனமகிழ் திட்டங்களை கொண்டு வர தடையாக இருக்கிறார். இதனால் பட்ஜெட்டை பொருத்தவரையில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று அலுவலர்கள் கூறினாலும் கூட, இதுவரை ஒப்புதலுக்கான உத்தரவு எங்களிடம் வந்து சேரவில்லை. அதற்கு பிறகுதான் சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட முடியும்.

எங்களால் காலதாமதம் இல்லை. மத்திய அரசில் பல மாதங்களாக கோப்புகள் டெல்லியில் தேங்கி கிடப்பதால் தான் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details