தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி கலவரம்: விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ்!

டெல்லி: டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தக் கோரிய அவசர வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் அம்மாநில காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

delhi high court
delhi high court

By

Published : Feb 26, 2020, 11:51 AM IST

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம், கடந்த திங்கள்கிழமை கலவரமாக மாறியது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தக் கலவரம் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கலவரம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், ராணுவத்தினர் குவிக்கப்பட வேண்டும், கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசிய அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் ஆகிய கோரிக்களை முன்வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனுவை நேற்று நள்ளிரவு அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் எஸ். முரளிதர், தல்வாந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பவம் குறித்து அறிக்கையுடன் டெல்லி காவல் துறை ஆணையம் உட்பட மூத்தக் காவல் துறை அலுலர்களுக்கு இன்று மதியம் 12:30 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இதையும் படிங்க : 'கூடுதல் படை வேண்டும்' - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details