இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,, "நேற்று இரவு முழுவதும் பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பில் இருந்தேன். நிலைமை மோசமாக உள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட வேண்டும்" என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம், கடந்த இரு நாட்களாக கலவரமாக மாறியுள்ளது. குறிப்பாக, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெடித்துள்ள இக்கலவரத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
முன்னதாக, டெல்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் கெஜ்ரிவால் இதே கோரிக்கையை முனைவைத்திருந்தார்.
டெல்லி கலவரம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது கவலையடைய செய்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லி கலவரம் : மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் அஜித் தோவால் இன்று ஆலோசனை!