தமிழ்நாடு

tamil nadu

டெல்லியின் கரோனா தொற்று சூழல் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை செயலர்

By

Published : Jun 26, 2020, 5:18 PM IST

டெல்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்க டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா ஆய்வு செய்தார்.

delhi-union-home-secretary-reviews-implementation-of-home-ministrys-decisions-on-covid-19
delhi-union-home-secretary-reviews-implementation-of-home-ministrys-decisions-on-covid-19

கரோனா தொற்று பாதிப்பு டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 73 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கடந்த ஜூன் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது டெல்லியில் நிலவி வரும் சூழலை மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்பாக டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் 20 ஆயிரம் வீடுகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதோடு, கண்காணிக்கவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி முழுவதும் கரோனா தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'பிபிஇ உடையில் 8 மணி நேரம் பணி' - சிரமங்களை விவரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details