டெல்லியில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள், நடைபாதையில் வகிக்கும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரின் இயல்பு வாழ்க்கையும் வெகுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர் !
டெல்லி : 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் நிலவிய மிக அதிகமான கடுங்குளிர் நாள் இன்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை டெல்லியில் வெப்பநிலை அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 5.4 டிகிரி செல்சியஸ்வரையும் பதிவானது. இதன்மூலம், 1997ஆம் ஆண்டிற்கு பிறகு டெல்லியில் நிலவிய மிக அதிகமான கடுங்குளிர் நாள் "இன்று" என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில 17 நாள்கள் அதிகளவில் குளிர் உணரப்பட்டதாகவும், இந்த ஆண்டு தொடர்ச்சியாக 10 நாள்கள் அதிக குளிர் நிறைந்தவையாக இருந்ததாவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 35 மக்களைக் கொன்ற 80 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!