புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுக்காவல்!
டெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகளை சந்தித்த நிலையில், காவல் துறை அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
விவசாயிகளைச் சந்தித்ததற்காக டெல்லி காவல் துறை அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "நேற்று, சிங்கு எல்லைப்பகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
விவசாயிகளுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். வீட்டுக்குத் திரும்பிய பின்னர், அவரின் வீட்டிற்கு வெளியே தடுப்புகள் அமைத்தனர். உள் துறை அமைச்சகத்தின் உத்தரவில் வீட்டுக்காவலுக்கு இணையான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்" என்றார்.