தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பாதிக்கப்பட்ட இளநிலை மருத்துவர் உயிரிழப்பு

டெல்லி: கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைநிலை மருத்துவர் ஜோகிந்தர் சவுத்ரி, ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

delhi-junior-doctor-who-battled-covid-19-for-a-month-passes-away
delhi-junior-doctor-who-battled-covid-19-for-a-month-passes-away

By

Published : Jul 26, 2020, 7:14 PM IST

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவுத்ரி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மருத்துவமனை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. மருத்துவக் கட்டணத்தை செலுத்த பணமில்லாததால், தன்னுடைய கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு மருத்துவமனைக்கும், தனக்கு உதவுமாறு ‘டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தக் கடிதம் ஊடகங்களில் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்கு லட்சத்திற்கும் அதிகமான அவரது மருத்துவக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினர் செலுத்திய முன் தொகையையும் திருப்பித் தர முடிவு செய்தது.

இந்நிலையில், பாபா சாஹேப் அம்பேத்கர் (பி.எஸ்.ஏ) மருத்துவ மருத்துவமனை மற்றும் கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் இளநிலை மருத்துவராக பணியாற்றி வரும் இவரது மகன் ஜோகிந்தர் சவுத்ரி கடந்த ஜூன் 23 அன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

பின்னர், இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, ஜூலை எட்டாம் தேதி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details