டேராடூனைச் சேர்ந்த துனான்டா என்ற வணிகர் பழங்காலத்து கேமரா முதல் இக்காலக் கேமரா வரை 250 அரிய கேமராக்களை சேர்த்து வைத்துள்ளார். இது குறித்து இவர் கூறும் போது, ‘வித்தியாசமான நிறுவனங்கள், வித்தியாசமான மாடல்கள் என என்னிடம் 250 கேமராக்கள் உள்ளன. இதில், 80 ஆண்டுகள் பழமையான கேமராக்களும் என்னிடம் உள்ளன. கேமராக்களைத் தேடித் தேடி சேர்ப்பதே என்னுடைய பொழுதுபோக்கு’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அரிய வகை கேமராக்களை வைத்திருக்கும் கேமரா காதலர்
டேராடூன்: கேமராவின் மீதுள்ள காதலால் உள்ளூர் வணிகர் ஒருவர் நூற்றுக்கணக்கான கேமராக்களைச் சேர்த்து வைத்துள்ளார்.
மேலும், இத்தனைக் கேமராக்களை தேடிப்பிடித்து வாங்க எது தூண்டுகிறது என எழுப்பியக் கேள்விக்கு, ‘கேமராக்களைத் தேடி கண்டுபிடித்து வாங்குவதன் மூலம் இன்றைய தலைமுறையினர் முன்னோர்கள் எவ்வாறு கேமராக்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்காகவே இந்த முயற்சி’ என உற்சாகமாகப் பதிலளித்தார்.
துனான்டாவின் குடும்பத்தினரும் இவரது கேமரா சேகரிக்கும் பொழுதுபோக்கிற்கு ஊக்கமளிக்கின்றனர் என்பது சுவாரசியத் தகவல். இந்தக் கேமரா காதலர் இன்னும் சில பழைமை வாய்ந்த பொருட்களை இவரது வீட்டில் வைத்திருக்கிறார். கையால் எழுதப்பட்ட ராமாயண புத்தகம் ஒன்றிணையும், 175 வயது பழமை வாய்ந்த மேஜை ஒன்றிணையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.