மலைகளால் சூழப்பட்டுள்ள அழகிய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசதம், பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் மாசுபாட்டைச் சந்தித்து வருகிறது. ஹிமாச்சலின் அழகைக் கெடுக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
சிர்மூர் மாவட்டத்தின் 'லானா பால்தா' பஞ்சாயத்திற்குட்பட்ட 'பாரு சாஹிப்' கிராமத்தில் தான், இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள கல்கிதர் அறக்கட்டளை, திடக்கழிவு மேலாண்மையின் கீழ், அருகிலுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கின்றனர்.
வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், முதலில் தரம் பிரிக்கப்படுகின்றன. பின்னர் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் உருக்கப்பட்டு செங்கற்களாகவும் டைல்ஸ்களாகவும் உருமாற்றப்படுகின்றன.
இங்கு தயாரிக்கப்பட்ட செங்கற்கள், அருகிலுள்ள ஊர்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இதுமட்டுமின்றி பைகளும், ஃபைல்களுக்கான கவர்களும் கூட மற்ற கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறன.
அதேபோல் அப்பகுதி மக்கள் செங்கற்களையும் அழகிய குவளைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்தே உருவாக்குகின்றனர். இங்குள்ள மக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பெரு முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் நடைபாதைகள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.