கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமைப்பு சாரா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவ நாடு முழுவதும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உதவ, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கணக்குகள் குறித்தத் தரவுகள் தங்களிடம் இல்லை என கர்நாடக மாநில அரசு வேதனைத் தெரிவித்துள்ளது.
விவசாயிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்தத் தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும், இவர்களது கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்த முதலில் இவர்கள் குறித்த தரவுகள் வேண்டும் எனவும் அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்
கரோனா தொற்றால் ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து இதுபோன்ற இக்கட்டான சூழல் நேரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் இந்தக் கொள்ளை நோய் காலம் தங்களைப் பொறுத்தவரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த தரவுகளை சேகரிக்க ஒரு வாய்ப்வை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.