டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) ஒதுக்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் (ஜூலை 24) இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உயர் அலுவலரை சுட்டுக்கொன்று, காவலர் தற்கொலை...!
டெல்லி: லோதி எஸ்டேட் பகுதியில் சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அலுவலரை சுட்டுக்கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்ட சிஆர்பிஎஃப் காவலர்
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற துணை ராணுவப் படையின் மூத்த அலுவலர்கள், உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூரைச் சேர்ந்தவர் என்றும் கொலை செய்யப்பட்டவர் ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.