தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2019, 3:05 AM IST

ETV Bharat / bharat

குடியிருப்புகளில் புகுந்த முதலைகள்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் கனமழைக் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், ஏரியில் உள்ள முதலைகளும் ஊருக்குள் வந்து நடமாடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலை

குஜராத் மாநிலத்தில் சில நாட்களாகப் பெய்த கன மழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் வதோதரா மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதந்துள்ளது. இச்சமயத்தில், புரண்டோடும் வெள்ளத்தில், முதலை குட்டி ஒன்று அலைந்து திரிவது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

குடியிருப்புகளில் புகும் முதலைகள்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!

இதனையடுத்து இந்த முதலை வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகையில், “இங்கிருக்கும் விசுவாமிருதி ஆறு 600 முதலைகளின் வாழ்விடமாக உள்ளது. இந்த ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், இந்த முதலை குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details