தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2020, 9:14 AM IST

Updated : Jul 22, 2020, 10:32 AM IST

ETV Bharat / bharat

வெடிபொருளை கடித்த மாடு பலத்த காயம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அருகே பண்ணையில் காட்டு பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி பொருளை எதிர்பாராதவிதமாக கடித்த மாடு பலந்த காயம் அடைந்துள்ளது.

வெடிபொருளை உட்கொண்டதால் பலத்த காயமடைந்த மாடு
வெடிபொருளை உட்கொண்டதால் பலத்த காயமடைந்த மாடு

கர்நாடக மாநிலம் பெட்டதஹள்ளியை சேர்ந்தவர் விவசாயி நரசிம்ம கவுதா. இவர் வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் மாட்டை மேய விட்டிருந்தார். அப்போது, மாடு அருகில் இருந்த பண்ணையில் வைத்திருந்த வெடி பொருளை எதிர்பாராதவிதமாக கடித்ததால், மாடு படுகாயமடைந்தது.

இந்தாண்டு ஜூன் மாத தொடக்கத்தில், மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பசுவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 'வெடி பொருள் கலந்த உணவை, அளித்ததால் அந்த மாட்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல், மே 27 அன்று பாலக்காடு மாவட்டத்தில் பட்டாசுகளால் நிரப்பப்பட்ட பழத்தை சாப்பிட்ட யானை ஒன்று உயிரிழந்தது. வெல்லியார் நதியில் யானை அதன் கீழ் தாடையில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்ததாக வன அலுவலர்கள் தெரிவித்தனர்.

பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார்.

Last Updated : Jul 22, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details