கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவம்படம் காலனியில் சுமார் 80க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வசிக்கின்றனர்.
காடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கேரள மலைவாழ் மக்கள்; நடந்தது என்ன?
மலப்புரம்: கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, மலைவாழ் மக்கள் காடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளா
இந்நிலையில், உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து இந்த மக்களைக் காப்பதற்காக அவர்களைக் காடுகளில் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அந்த மக்கள் இன்று காடுகளில் தங்கவைக்கப்பட்டனர்.
அம்புமலா காலனியைச் சேர்ந்த 26 குடும்பங்களில் 14 குடும்பங்கள் பன்டீரையிரம் காட்டின் குறவன் ஆற்றோரமும், சோழா காலனியைச் சேர்ந்த எட்டு குடும்பங்கள் கஞ்சிரப்புழா ஆற்றோரமும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.