தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் 4.25 லட்சத்தை எட்டிய கரோனா பாதிப்பு!

By

Published : Jun 22, 2020, 1:30 PM IST

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 14 ஆயிரத்து 821 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

COVID-19
COVID-19

இந்தியாவில் தொடர்ந்து 10 நாளுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்கு லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலும் கரோனாவால் 13 ஆயிரத்து 699 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவிலிருந்து இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 195 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 ஆகவுள்ளது.

அஸ்ஸாமில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 331 பேருக்கு புதியதாக கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்த துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாநிலத்தில் ஜூன் 4ஆம் தேதி 285 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதுவரையிலும் மூன்றாயிரம் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர், ஒன்பது பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் பிஸ்வா ஷர்மா, “ஞாயிற்றுக்கிழமை இரவில் 198 பேருக்கு கரோனா உறுதியானது. ஏற்கனவே பகலில் செய்யப்பட்ட சோதனைகளில் 133 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

வெகுநாள்களுக்குப் பிறகு ஒரேநாளில் அதிகபட்சமாக 331 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் கரோனாவிலிருந்து மீள்வோர் விகிதம் 63.2 விழுக்காடாகவுள்ளது.

நேற்று (ஜூன் 21) 202 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மருந்துத் தயாரிப்பில் களமிறங்கும் இந்திய நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details