தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் -19 எதிரோலி: கேரள சட்டப்பேரவை கூட்டுத் தொடர் குறைப்பு!

திருவனந்தபுரம்: கோவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால், கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையான இன்றே முடித்துக் கொள்ளப்பட்டது.

Covid- 19: Kerala Assembly session curtailed till Friday
Covid- 19: Kerala Assembly session curtailed till Friday

By

Published : Mar 13, 2020, 8:54 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 17 வெளிநாட்டவர்களுக்கும் 65 இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் உள்ளது உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 22 பேருக்கு கோவிட் -19 வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த கேரள சட்டப்பேரவைக் கூட்டுத் தொடரை காலையிலேயே கூடி, சபாநாயகர் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

கேரள சட்டப்பேரவை மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பீதியால் இன்றே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...மை டியர் கும்பகர்ணாஸ் உங்களுக்குத்தான்... இந்த நாள் எந்திரிங்கோ...!

ABOUT THE AUTHOR

...view details