இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 824, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,496ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் 19,868 பேர், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 5,803 பேர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சனிக்கிழமை (ஏப்ரல் 25) மாலை முதல் தற்போது வரை கரோனா தொற்றால், 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 824ஆக உயர்வு!
டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 824ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 824ஆக உயர்வு
கரோனா தொற்றால் இதுவரை 824 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 323 பேர் உயிரிழந்தனர். மேலும், குஜராத்தில் 133 பேர், மத்திய பிரதேசத்தில் 99 பேர், டெல்லியில் 54 பேர், ஆந்திராவில் 31 பேர் , ராஜஸ்தானில் 27 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
Last Updated : Apr 26, 2020, 12:25 PM IST