இந்திய வர்த்தக சபையின் 95ஆவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தை குடிமக்கள் வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்சார்பு என்ற இலக்கை அடைய முதல்படியே ஆத்ம நிர்பார் பாரத் திட்டம். சிறு வணிகர்களை ஊக்கப்படுத்தி வளர்ப்பதன் மூலமே இந்தியாவை தற்சார்புள்ள நாடாக்கலாம். இதுவே அதற்கு சரியான தருணம்.
மருத்துவம், விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் தற்சார்பாக விளங்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.