சீனாவிலிருந்து பரவிய இந்தக் கொடிய வைரஸ் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகி, கடந்த 26 நாள்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் விரைவாக பரவின.
இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 18 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டு 601 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள மத்திய அரசு, ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வென்டிலேட்டர்
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பாக இந்த வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவிகள்) மருத்துவம் உலகம் நம்புகின்றது.
உலகளாவிய பெருந்தொற்றான கரோனா வைரஸ் நுரையீரலின் மேல் சுவாசக் குழாயைத் தாக்கி, சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் உதவி அவசரத் தேவையாகிறது. இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.
ஆட்டோ மொபையில் நிறுவனங்களை அணுகியுள்ள அரசு
தொற்றுநோய்க்கு எதிராக போராட உதவும் இந்த போது வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை குறித்து தாமதமாக அறிந்திருப்பதால், இந்தியா தற்போது அந்த கருவிகளை அவசரகதியில் கொள்முதல் செய்ய பல்வேறு அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளது. 'மலிவான விலையில்' அவற்றை தயாரிக்க மத்திய சுகாதார அமைச்சகம், ஆட்டோ மொபையில் நிறுவனங்களை அணுகியுள்ளது.
இதற்காக பல ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வு அறிக்கைகளை அரசின் ஒப்புதலுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்களின் முக்கிய கவலை சுவாச உதவியை மலிவான விலையில் வடிவமைப்பதாகும்.
கையிருப்பில் வெறும் 60,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தற்போது இந்தியாவில் 60,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 10,000 க்கும் குறைவானவை அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தற்போது, இந்தியாவுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான வென்டிலேட்டர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த இரண்டு மாதங்களில் 8,280 வென்டிலேட்டர்கள் (பிப்ரவரி - 2,700 மார்ச் - 5,580) உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ வல்லூநர்கள் கூறுகையில், உள்நாட்டு வென்டிலேட்டரின் விலை 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்கும், இறக்குமதி செய்தால் 11 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என அறியமுடிகிறது
உதிரி பாகங்கள் வழக்கம் போல் இறக்குமதி செய்யப்பட்டால் மாதத்திற்கு 5,500 வரை உற்பத்தி செய்ய முடியும் என்று தொழிற்நுட்ப வல்லுநனர்கள் கூறுகின்றனர். மே மாதத்திற்குள் 50,000 யூனிட்டுகளின் மாத உற்பத்தி திறனை அடைய இந்தியா தற்போது இலக்கு வைத்துள்ளது.
வென்டிலேட்டர் வகைகள்
வென்டிலேட்டர்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இருப்பினும், இரண்டு வகையான வென்டிலேட்டர்கள் இதில் பிரசித்து பெற்றவையாக உள்ளன.
மைக்ரோபிராசசர் அடிப்படையிலான மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டர் : தற்போதைய சூழலில் மைக்ரோபிராசசர் அடிப்படையிலான மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டர்கள் தான் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான வென்டிலேட்டர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளின் ஐ.சி.யுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கை சுவாச அலகு வென்டிலேட்டர் : இதேபோல், செயற்கை சுவாச அலகு வென்டிலேட்டர்களும் அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். அம்பு பேக் என்றும் அழைக்கப்படும் இந்த வென்டிலேட்டர்கள் மிகவும் சிக்கனமானவை. கையால் பிடித்தப்படி, சுயமாகவே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி நோயாளிகளுக்கு நேர்மறையான அழுத்தக் காற்றோட்டத்தை வழங்கும். இயந்திரங்கள் மூலமாகவும் இவை இயக்க முடியும்.
பெல் - மஹிந்திரா - ஸ்கேன்ரே கூட்டணி
அவசர சிகிச்சைக்கான உயிர்க்காப்பு கருவிகளை தயாரிப்பதில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஸ்கேன்ரே சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்துடன் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் இந்த பணியில் இணைந்துள்ளன. இந்த கூட்டணி மூலமாக மாதந்தோறும் 2,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் மே மாதத்திற்குள் உற்பத்தி திறனை 30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வா ஹெல்த்கேர் - மாருதி
நொய்டாவை தளமாகக் கொண்ட அக்வா ஹெல்த்கேருடன் கூட்டுசேர மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தயாராக உள்ளது. தற்போது, அக்வா ஹெல்த்கேர் தனது உற்பத்தி திறனை 400 முதல் 10,000-மாக உயர்த்த முயற்சிகள் செய்து வருகின்றது.
வென்டிலேட்டர் உற்பத்தி