நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க மகாராஷ்டிரா அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் கலந்துகொண்டார்.
இதில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஒருமாத சம்பளக் குறைப்பு செய்யப்படவுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், ''மார்ச் மாதம் வழங்கப்படவுள்ள சம்பளத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் 60 சதவிகிதம் அரசால் பிடிக்கப்படும்.
அரசு வேலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு 50 சதவிகித சம்பளமும், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு 25 சதவிகித சம்வளமும் பிடிக்கப்படும். விளிம்பு நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எவ்வித பிடித்தமும் இருக்காது.