தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர முதலமைச்சரின் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்

ஹைதராபாத்: சொத்துக்குவிப்பு வழக்கில் தான் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்த நிலையில், அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது.

Jagan
Jagan

By

Published : Jan 4, 2020, 9:57 AM IST

ஆந்திராவின் முதலமைச்சராக 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இருந்தபோது, அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டிஅந்த அதிகாரத்தை பயன்படுத்தி தன் நிறுவனத்திற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர், 2012 மே 27ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது

16 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக
தனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டதாக ஜெகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு (2019) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார்.

தற்போது, இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென அவர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஈரான் புதிய ராணுவ தளபதி நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details