தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தூரில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த தம்பதி கைது

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் 19,600 அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் 14 லட்சம்) வைத்திருந்த தம்பதியரை இந்தூர் சிறப்பு அதிரடிப் படையினர் (Special Task Force) கைது செய்தனர்.

dollar
dollar

By

Published : Jan 18, 2021, 9:11 AM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் அடையாளம் தெரியாத ஒருவரிடம் வெளிநாட்டு பணத்தை இருவர் ஒப்படைக்கவிருப்பதாக, இந்தூர் சிறப்பு அதிரடிப் படைக்குத் தகவல் கிடைத்தது. நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தம்பதியர் இருவரையும் சுற்றி வளைத்து, அவர்களிடம் இருந்த 19,600 அமெரிக்க டாலர்கள், இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 19,600 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.14 லட்சமாகும். சர்வதேச அளவில் இயங்கிவரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (ஹவாலா) மேற்கொள்ளும் குழுவுடன், இந்தத் தம்பதியருக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிறப்பு அதிரடிப் படை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

பேருந்தில் மும்பையில் இருந்து திரும்பி வந்த ஒருவரிடம், ரூ.20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்ட வழக்கில், இத்தம்பதியருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் இந்தூர் சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details