வளர்ச்சியின் பெயரில் மனிதர்கள் மேற்கொண்டுள்ள புத்திசாலித்தனமான பிற்போக்கு நடவடிக்கைகள் அவனது வாழ்வாதரத்திற்கே பல தொல்லைகளை உருவாக்குகியுள்ளன. தொழில் மையமாக்கலால் ஏற்படும் மாசானது இயற்கை வளங்களான வானம், பூமி, நீர் ஆகியவற்றை விஷமாக்கி, மனித வாழ்க்கையை இரக்கமின்றி அழிக்கிறது.
உலகளவில் இயற்கை மாசு காரணமாகல கொல்லப்பட்ட 8.3 கோடி மக்களில் 2.3 கோடி பேர் இந்தியர்கள் என்று 2008ஆம் ஆண்டு நடத்த சர்வதேச ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்துறை மாசுபாடு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்துள்ளனர்த.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு தழுவிய லாக்டவுன் உள்ளதால், தொழில்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதன் விளைவாக வியக்கத்தக்க வகையில் சுற்றுச்சூழலின் தூய்மை மேம்பட்டுள்ளது.
நதிகளில் நச்சுக் கழிவுகள் கலப்பது நிறுத்தப்படுவதால், தூய்மை மேம்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. கங்கை நதியை சுத்திகரிக்கும் நோக்கத்தை முப்பது ஆண்டுகளாக மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியின் போது இந்த முயற்சி ரூ .4 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டது.
இதில் எந்த தீர்வும் கிடைக்காததால், மோடி அரசு 2014 ஆம் ஆண்டில் 'நமாமி கங்கை' மெகா திட்டத்தை 310 திட்டங்களை இணைத்து ரூ. 28,790 கோடி செலவில் தொடங்கி 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க வேண்டும் என இலக்கு வைத்திருந்தது. இருப்பினும், 37 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்களை விரிவாக எடுத்து கங்கையை சுத்தப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்துறை கழிவுகளை மாசுபடுத்தாவிட்டால், கங்கை தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்பதை தற்போதைய முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது.
தொழில்துறை மாசு தற்போது இல்லாத நிலையில் முக்கிய ஆறுகள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் விதம், நதி நீரை சுத்தம் செய்வதற்கான அரசின் யுக்திகளில் மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
முதல் பிரதமர் ஜவஜர்லால் நேரு கங்கை நதியை இந்தியாவின் ஆத்மாவாக கருதினார். அந்த ஆத்மாவின் நீரை மாசுபடுத்தி குளிப்பதற்கு, குடிப்பதற்கு தகுதியற்றதாக மாறி எட்டு மாநிலங்களில் தனது பயனத்தை மேற்கொள்கிறது.