பிகார் மாநிலம் மதுபானியை அடுத்த பிஸ்ஃபி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் ஹரிபூஷன் தாகூர் பச்சோல். பாஜகவைச் சேர்ந்த இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள் என அவர் நேற்று கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் புகழ்ப்பெற்ற ஆன்மீகக் கவிவலவர் ஆதி கவி வித்யாபதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட மிதிலா விபூதி விழாவின் இரண்டாம் நாளில் சிறப்பு விருந்தினராக ஹரிபூஷண் கலந்துகொண்டார்.
பாஜகவைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்! அப்போது பேசிய அவர், “ பிற மதங்கள் வெறுப்பைக் போதிக்கவில்லை என்பது ஒரு அப்பட்டமான பொய். நான் மக்களுக்காக உழைத்த போதிலும், பாஜகவைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். கடவுள் கல்லில் கூட இருக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். ராமர்-கிருஷ்ணர், கீதை போன்ற புனித நூல்கள் குறித்தும் ஆதி சங்கராச்சாரியார், வித்யாபதி போன்ற மெய்ஞானிகள் குறித்தும் விவாதிக்கும்போது குறிப்பிடப்பட்ட வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை தங்களது எதிரிகளைப் போல உணர்கிறார்கள்” என்றார்.
முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என கர்நாடக அமைச்சரும், பாஜக தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு சீட் கிடையாது - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!