தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் கோமியம் அருந்தினார் - அமைச்சர் சர்ச்சை பேச்சு!

பாட்னா: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கோமியம் அருந்தியதாக அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி குமார்

By

Published : Sep 8, 2019, 6:54 PM IST

Updated : Sep 8, 2019, 7:16 PM IST

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உடல் நலனுக்காக கோமியத்தை அருந்தியுள்ளார். புற்று நோயின் மருந்தாக கோமியத்தை பயன்படுத்தலாமா என சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்திவருகிறது.

கோமியம் தனித்தன்மை வாய்ந்தது. பல நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இந்த அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக முயற்சி மேற்கொண்டுவருகிறது. சர்க்கரை நோய், புற்று நோய் உலகுக்கே சவாலாக விளங்குகிறது. இந்த நோய்களை உலகிலிருந்து அகற்ற முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

Last Updated : Sep 8, 2019, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details