தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில முதலமைச்சர்கள் விமர்சனங்களை ஏற்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்...!

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் உள்ள மாநில முதலமைச்சர்கள் விமர்சனங்களை ஏற்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

By

Published : Jan 9, 2021, 7:24 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில், 19 (1)ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை ஆதரித்தது மட்டுமல்லாமல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாகக் கையாள தவறிவிட்டார் என விமர்சித்த ஒருவர் மீது வழக்கு தொடுத்ததற்காக உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்தது. கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக நமது சட்டங்களில் உள்ள தண்டனை விதிகளை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தி வரும் மாநில அரசுகள், மீது ஒரு பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாநிலத்தை "சட்டம் மற்றும் ஒழுங்கு இல்லாத ஒரு காட்டாட்சியாக" மாற்றியதாக முதலமைச்சரை விமர்சிக்கும் ஒரு ட்வீட்டை வெளியிட்டது தொடர்பான வழக்கில், யஷ்வந்த் சிங் என்பவர் மீது 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல், பணயத்தொகை, கொலைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவதூறு தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008இன் பிரிவு 66டி ஆகிய இரண்டு விதிகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். பொதுவாக இந்த விதிகள் ஆள்மாறாட்டம் தொடர்பானவை.

அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்டது:

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் சிங் மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் வழக்கறிஞர், மாநில அரசை விமர்சித்த யஷ்வந்த் சிங்கின் கருத்துகள் அரசியலமைப்பின் 19ஆவது பிரிவின் கீழ் கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்டது, வெறும் கருத்து வேறுபாடு குற்றத்துக்கு உட்பட்டது அல்ல என்றார். எனவே, அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது. மாநில அரசாங்கத்துக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை நிறுத்துவதற்கு அவரை அச்சுறுத்துவதற்காக உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டார். எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்பதால், வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பங்கஜ் நக்வி, விவேக் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இபிகோ பிரிவு 500இன் கீழ் "அவதூறு" குற்றச்சாட்டைக் குறிப்பிடுகையில், ட்வீட் பதிவு அவதூறுக்குள்ளானது என்று கூற முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கருத்துகளை தெரிவிப்பது, எங்களைப் போன்ற ஒரு அரசியலமைப்பு தாராளமய ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும். இது அரசியலமைப்பின் 19ஆவது பிரிவின் கீழ் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படுகிறது என கூறினர்.

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008இன் பிரிவு 66டியை மீறினார் என்பது மனுதாரருக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டு. அந்த சட்டத்தின்படி எவரேனும், எந்தவொரு தகவல்தொடர்பு சாதனம் மூலமாகவோ அல்லது கணினி மோசடி மூலமாக ஆள்மாறாட்டம் செய்திருந்தால் அதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்று சட்டம் கூறுகிறது.

நீதிபதிகள் வருத்தம்:

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஏற்ப இந்த விதிகளை ஆராய்ந்ததில் பிரிவு 66டி இன் கீழ் குற்றத்தை தொலைதூரத்தில் கூட காணவில்லை என்று நீதிபதிகள் கூறினர், ஏனெனில் இந்த விதிமுறை ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்வது தொடர்பானது, வெளிப்படையான செயலைச் செய்யும்போது, ​​மனுதாரர் மற்றவர்களின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி ட்வீட் செய்தார் அல்லது மோசடி குற்றச்சாட்டு எதுவும் பதிவாகவில்லை. எனவே, இந்த பிரிவின் கீழ் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை, இது உண்மையில் அரசாங்கத்துக்கும் காவல்துறையினருக்கும் எதிரான குற்றச்சாட்டு. சட்டம், ஒழுங்கு நிலைமையை முதலமைச்சர் கையாளும் விதத்தில் ஏமாற்றமடைந்த ஒரு குடிமகனுக்கு கிரிமினல் அவதூறுக்காக அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்று தண்டிப்பது இந்த நாடு கேள்விப்படாத ஒன்று என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

ஆனால், இது உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கவில்லை. மேலும் பல்வேறு முதலமைச்சர்களும் மாநில அரசுகளும் அரசியலமைப்பால் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை சுதந்திரங்களை பறிக்கத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கைக்கு மட்டுமல்லாமல், விமர்சிப்பவர்களை சிறையில் அடைக்கும் இந்த போக்கை தொடங்கியதில் மேற்கு வங்கம் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் 2012ஆம் ஆண்டில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மகாபத்ராவையும் அவரது நண்பரையும் முதலமைச்சர் பற்றி கேலிசித்திரம் பகிர்ந்ததற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்தது. அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்ததுடன், இருவருக்கும் தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. ஆணையத்தின் உத்தரவுகளுக்கு அரசு பணியாததால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடும்படி பேராசிரியரை கட்டாயப்படுத்தியது. உயர் நீதிமன்றம் மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து, மஹாபத்ரா, அவரது நண்பருக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டை தலா ரூ .75,000 ஆக உயர்த்தியது.

விமர்சனங்களை முதலமைச்சர்கள் ஏற்க வேண்டும்:

2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கையை விமர்சித்ததற்காக, நாட்டுப்புற பாடகர் ஒருவர் மீது பாய்ந்த தேச துரோக குற்றச்சாட்டு இன்னும் அபத்தமானது. மாநில லலிதகலா அகாடமி வருடாந்திர விருதுகளுக்காக, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு பிஷப்பை விளக்கும் கார்ட்டூனைத் தேர்ந்தெடுத்ததற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் அதிருப்தி அடைந்தது. கிறிஸ்தவ அமைப்புகளும் மாநில அரசும் அகாடமி தனது முடிவை மீண்டும் பரிசீலிக்க விரும்பின. ஆனால் அகாடமி அதன் முடிவை மாற்றவில்லை. மூத்த குடிமக்களாகிய நாங்கள் இந்த நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயக சூழலில் வாழ்ந்து செழித்து வளர்ந்திருக்கிறோம். அதில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நாங்கள் மிகவும் கடுமையான விவகாரங்களை சொல்லியிருக்கிறோம். ஸ்வீடன் ஆயுத உற்பத்தியாளரான போஃபோர்ஸ் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பிறருக்கு அளித்த லஞ்சம் தொடர்பான சர்ச்சையின் உச்சத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு ராம் ஜெத்மலானியின் புகழ்பெற்ற பத்து கேள்விகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு நாளும் வெளியிட்டது. அந்த கேள்விகளைப் படித்தால், அவர் தினமும் காலையில் திணற வேண்டும், ஆனால் அவர் அதைப் பார்த்து சிரித்து விட்டு போக வேண்டியிருந்தது. ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக்கொண்டனர். அதுபோல், இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் சிலர் இதைப் பின்பற்ற வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details