தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் மும்பையில் பொதுபோக்குவரத்து முடங்கும் அபாயம்!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் மும்பை நகரத்தில் பொதுபோக்குவரத்து முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

Mumbai
Mumbai

By

Published : Mar 17, 2020, 5:00 PM IST

Updated : Mar 17, 2020, 11:33 PM IST

இந்தியாவிலேயே கரோனா வைரஸ் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமாக உணரப்படுகிறது. தொடக்கத்தில் கேரளா மாநிலத்தில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதன் தாக்கம் வேகமாக உயர்ந்துள்ளது.

தற்போது வரை மகாரஷ்டிராவில் 39 பேர் கரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளநிலையில், இன்று காலை மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் 64 வயது முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து மாநிலத்தில் நோய் பாதிப்பைத் தடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரஜேஷ் தோபேவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜேஷ் தோபே, "மும்பை நகரில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுவருகிறது. தேவைப்பட்டால் நோய் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்த நகரின் பொதுப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கையை அரசு வரும் நாட்களில் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வரும் சில நாட்களில் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு மும்பையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவை முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க நடைபெற்ற மத நிகழ்ச்சியால் 46 பேருக்கு வைரஸ் தொற்று!

Last Updated : Mar 17, 2020, 11:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details