தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் அரசு அலுவலர்களின் வருகைப் பதிவு குறித்து முதலமைச்சர் திடீர் ஆய்வு!

By

Published : Sep 9, 2020, 2:59 PM IST

புதுச்சேரி: அரசு அலுவலர்களின் வருகைப் பதிவு குறித்து வந்த புகாரின் அடிப்படையில் தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, அலுவலர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chief Minister's surprise inspection of the attendance record of government officials in Pondicherry!
Chief Minister's surprise inspection of the attendance record of government officials in Pondicherry!

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9:30 முதல் மணி முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக அனைத்து அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் காலை 9:30 மணிக்கு பணிக்கு வருவதில்லை என முதலமைச்சர் நாராயணசாமிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று (செப்.9) காலை 10.30 மணி அளவில் திடீரென கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு வந்த முதலமைச்சர், அலுவலர்களின் வருகைப்பதிவு குறித்த ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு சில அலுவலர்கள் பணிக்கு வராதது குறித்து கேள்வி எழுப்பிய முதலமைச்சர் அனைத்து துறை அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து தலைமை செயலர் அஸ்வினி குமார் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா? என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், அரசு துறை ஊழியர்களில் 90 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கும் என மத்திய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு அலுவலர்கள் பணிக்கு வருகின்றனரா? என ஆய்வு செய்தபோது அதிகாரிகள் சிலர் வராதது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து தவறு செய்யும் மற்றும் பணிக்கு சரியான வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:கேரள தங்கக் கடத்தல் வழக்கு: நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

ABOUT THE AUTHOR

...view details