தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2020, 1:13 PM IST

ETV Bharat / bharat

சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் காலம் குறைப்பு

டெல்லி : முன்களப் பணியாளர்களான சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் காலத்தை 14 நாட்களில் இருந்து ஒரு வாரமாகக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Quarantine period for health workers
Quarantine period for health workers

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது பலன் அளிக்க்கக்கூடிய நடவடிக்கை என்றாலும், கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் ஏன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், சுகாதார ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்பன போன்ற கேள்விகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

மேலும். “கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. அவர்களின் தேவை இன்றியமையாததாக இருப்பதால், அவர்களால் 14 நாட்கள் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது” என்பன போன்ற கருத்துக்களை மனதில் கொண்டு, மத்திய அரசு தற்போது ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் காலம் ஒரு வாரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அதன்பின் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிகுறிகள் இல்லாமல் சோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மீண்டும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா- சீனா எல்லை அருகே சாலையமைக்கும் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details