உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்தை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் 2.15 ஆக உள்ளது.
ஜூலை 31ஆம் தேதியின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.22 விழுக்காட்டினர் மட்டுமே வென்டிலேட்டர்களை பயன்படுத்திவருகின்றனர். உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் அதை விற்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. வென்டிலேட்டர்களை தயாரிப்பது நாட்டில் அதிகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.