தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் முடிவடைந்தும் ஓயாத மோதல்: மத்திய அரசு கவலை!

டெல்லி: மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே நடைபெறும் மோதல் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய உள் துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருக்கிறது.

central ministers

By

Published : Jun 10, 2019, 10:04 AM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெருவாரியான வாக்குகளை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் மாநில அரசான மம்தாவின் திருணாமுல் காங்கிரஸை பாஜக தகர்த்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் பரப்புரையின்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மக்களை சந்திக்கச் சென்றபோது அங்கு ஒரு கடையில் பாஜகவின் கொடியும் அதனுடயை பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. அதை எடுத்துவிட்டு திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் அதனுடைய சின்னத்தையும் மம்தா மாற்றினார்.

இந்நிலையில் பெயரை மாற்றிய சம்பவத்தினால் நேற்று முன்தினம் திருணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சி தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் மோதலாக மாறியதில் நான்ரு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மூன்று பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் திருணாமுல் கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சகம், தேர்தல் முடிவடைந்த பிறகும் இரு கட்சியினருக்கு இடையே மோதல் முடிவடையவில்லை என்று கவலை தெரிவித்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட மாநில அரசுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details