புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எதிர்பாராத இந்த சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை!
புதுச்சேரி: சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்து வருவதால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரி பதிவாளர் அலுவலகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற திடீர் சோதனை, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, உழவர்கரை நகராட்சி அலுவலகம், புதுச்சேரி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.