ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டமான துனியில், செவ்வாய்க்கிழமையன்று (15/10/2019), ஆந்திர ஜோதி செய்தித்தாளின் செய்தியாளர் கே சத்யநாராயணா(45) என்பவரை, அடையாளம் தெரியாத இருவர் சாலையில் வைத்து படுகொலை செய்தனர். இந்த விவகாரம் செய்தியாளர்கள் மத்தியில் மாநிலம் முழுவதிலும் தீயாய் பரவ, கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி செய்தியாளர்கள் களத்தில் இறங்கினர்.
செய்தியாளர் கொலையில் சிக்குகிறார் ஒய்எஸ்ஆர் கட்சி எம்.எல்.ஏ.,
ஹைதராபாத்: ஆந்திர செய்தியாளர் கொலை வழக்கில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் டாடிஷெட்டி ராஜா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது, இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சத்யநாராயணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் பேரில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் டாடிஷெட்டி ராஜாவுடன், ஐந்து பேர் சேர்த்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இக்கொலை சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்துள்ள காவல் தலைமை இயக்குநர் குவாதம் சவாங், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணையை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.