இதுதொடர்பாக மகாராஷ்டிரா சட்டமேலவையில் பாஜகவின் பிரவின் தரேக்கர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பி, "மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு 11 ஆயிரத்து 306 பேர் புற்றுநோயால் பாதிப்படைந்தனர். அதில், ஐந்து ஆயிரத்து 727 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 மாவட்டங்களில் உள்ள மருத்துவர்களுக்கு ஹீமோதெரப்பபி சிகிச்சை எப்படி செய்யவேண்டும் என்பது குறித்து டாடா மெமோரியல் கேன்சர் மருத்துவமனையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னும் ஒரு வருடத்துக்குள் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.