தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 31, 2020, 12:29 PM IST

ETV Bharat / bharat

’இந்தியாவைக் காப்பாற்றுங்கள்’ - மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Budget
Budget

நாடாளுமன்ற பட்ஜெட் தொடருக்காக இன்று இரு அவைகளும் கூடியுள்ளது. இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கூட்டத் தொடர் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பட்ஜெட்டை முன்னிட்டு பாஜகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் முன்னதாக நேற்று (ஜன.30) நாடளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மோடி, நாடளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவித்த பல முக்கிய விஷயங்களைக் கேட்டறிந்த அவர், இதுபோன்ற முக்கிய விஷயங்களில் வெளிப்படையான கலந்துரையாடல் நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சோனியா தலைமையில் போராட்டம்

இதனிடையே, நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக இன்று காலை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் "சேவ் இந்தியா (SAVE INDIA)" ”நோ சிஏஏ, நோ என்பிஆர் (NO CAA, NO NPR)" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டம்

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த சாய்னா - தலைவர்கள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details