தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 8:12 PM IST

ETV Bharat / bharat

திமுக புறக்கணித்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற விசிக!

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

Opposition meet over CAA
Opposition meet over CAA

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிக்க இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமைில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2 மணியளவில் நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, சிவ சேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "மத்திய அரசு மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புகிறது, மக்களைப் பிளவுபடுத்த முயல்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. அரசியலமைப்பை குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மக்களின் போராட்டங்களை உத்தரப் பிரதேச காவல் துறையும் டெல்லி காவல் துறையும் கையாண்ட விதம் மிருகத்தனமாக உள்ளது.

எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

பிரதமரும் உள்துறை அமைச்சரும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். சில வாரங்களுக்கு முன், அவர்கள் கூறிய கருத்துகளுக்கே இப்போது முரனாக பேசுகின்றனர். மோடி - ஷா அரசினால் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க முடியவில்லை" என்றார்.

சுமார் 4 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்றார்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை தவிர்க்க சொல்லும் ஆமை!

ABOUT THE AUTHOR

...view details